அரசு வேலை கிடைக்காததால்பட்டதாரி வாலிபர் தற்கொலை


அரசு வேலை கிடைக்காததால்பட்டதாரி வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 19 April 2023 12:15 AM IST (Updated: 19 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வீரபாண்டி அருகே அரசு வேலை கிடைக்காததால் பட்டதாரி வாலிபா் தற்கொலை செய்து கொண்டார்.

தேனி

கடமலைக்குண்டு காலனி தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 25). எம்.ஏ. பட்டதாரியான இவர், அரசு வேலைக்காக போட்டி தோ்வுகளை எழுதி வந்தார். ஆனால் வேலை கிடைக்காததால் மன வருத்தத்தில் இருந்தார். இந்நிலையில் கடந்த 14-ந்தேதி கோட்டூர்-கூலையனூர் இடையே உள்ள முல்லைப்பெரியாற்றில் வைத்து அவர் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் மயங்கி விழுந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story