விவசாயியிடம் பணம் ஜேப்படி


விவசாயியிடம் பணம் ஜேப்படி
x

கெலமங்கலம் அருகே விவசாயியிடம் பணம் ஜேப்படி செய்தனர்.

கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் செந்தில் நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 58). விவசாயி. இவர் நேற்று முன்தினம் கெலமங்கலம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர்கள் 2 பேர் முருகன் கவனத்தை திசை திருப்பி அவரது பாக்கெட்டில் இருந்த 220 ரூபாயை ஜேப்படி செய்தனர்.

இதையறிந்த முருகன், அங்கிருந்த பயணிகள் உதவியுடன் 2 வாலிபர்களையும் பிடித்து கெலமங்கலம் போலீசில் ஒப்படைத்தார். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தேன்கனிக்கோட்டை தாலுகா சாப்பரானப்பள்ளி கிராமத்தை சேர்ந்த நேரு மகன் சுபாஸ்சந்திரபோஸ் (22), பென்னங்கூர் அருகே உள்ள இஸ்லாம்புரம் பகுதியை சேர்ந்த இலியாஸ் மகன் இந்தியாஸ் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story