கொடிக்கம்பம் அமைக்க அனுமதி மறுக்கப்பட்டதால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் முயற்சி


கொடிக்கம்பம் அமைக்க அனுமதி மறுக்கப்பட்டதால்   விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் முயற்சி
x

கொடிக்கம்பம் அமைக்க அனுமதி மறுக்கப்பட்டதால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலுக்கு முயன்றதால் கள்ளிப்பட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு

டி.என்.பாளையம்

கொடிக்கம்பம் அமைக்க அனுமதி மறுக்கப்பட்டதால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலுக்கு முயன்றதால் கள்ளிப்பட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

கொடிக்கம்பம்

டி.என்.பாளையத்தை அடுத்த கள்ளிப்பட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 60 அடி உயர கொடிக்கம்பம் அமைப்பதற்கான பணியை ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் அம்பேத்கர், பொருளாளர் மிசா.தங்கவேல், துணை செயலாளர் பொன்னரசு உள்ளிட்ட கட்சியினர் செய்து வந்தனர்.

இதுகுறித்து நேற்று தகவலறிந்த பங்களாப்புதூர் போலீசார் அங்கு சென்று, உரிய அனுமதி பெற்று கொடிக்கம்பம் அமைக்க வேண்டும் எனக்கூறி பணியை தடுத்து நிறுத்தினா்.

இதனால் அங்கு கொடிக்கம்பம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த கட்சியினர் அதே பகுதியில் சாலை மறியலில் ஈடுபட முயன்றார்கள்.

பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவல் அறிந்ததும் உதவி போலீஸ் சூப்பிரண்டு அய்மன் ஜமால், மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர், பங்களாப்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்குமார் உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இறுதியில் கொடிக்கம்பம் அமைப்பதற்கான பீடம் அமைத்துக் கொள்ள போலீசார் அனுமதி அளித்தனர். எத்தனை அடி உயரத்தில் கொடி கம்பம் அமைக்கிறீர்கள் என்பதை வருவாய்த்துறையினரின் உரிய அனுமதி பெறவேண்டும் என்று தெரிவித்தனர். அதை ஏற்றுக்கொண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் முயற்சியை கைவிட்டனர்.

இந்த போராட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன், டி.என்.பாளையம் ஒன்றிய செயலாளர் பிரகாஷ், அந்தியூர் தொகுதி துணைச்செயலாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.


Next Story