பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால்குன்னூரில் திடக்கழிவு மேலாண்மை மையம் மூடல்


பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால்குன்னூரில் திடக்கழிவு மேலாண்மை மையம் மூடல்
x
தினத்தந்தி 10 May 2023 1:00 AM IST (Updated: 10 May 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

குன்னூரில் பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் திடக்கழிவு மேலாண்மை மையம் மூடப்பட்டது.

நீலகிரி

குன்னூர்

குன்னூரில் பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் திடக்கழிவு மேலாண்மை மையம் மூடப்பட்டது.

பொதுமக்கள் புகார்

தமிழகத்திலுள்ள உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் உள்ள குடியிருப்புகளில் பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும் குப்பைகள் என்றும் மக்காத குப்பைகள் என்றும் தரம் பிரித்து வாங்க அரசு அறிவுறுத்தி இருந்தது. இதன்படி வீடுகளிலிருந்து பிரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு குப்பை கிடங்குகளில் சேகரிக்கப்பட்டன. குன்னூர் நகராட்சியில் 30 வார்டுள் உள்ளன. இந்த வார்டுகளில் பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் உழவர் சந்தை மற்றும் வள்ளுவர் நகர் ஆகிய 2 பகுதிகளில் தரம் பிரிக்கப்படுகிறது.இதில் உழவர் சந்தை அருகே குப்பைகள் உரம் தயாரிக்கவும், வள்ளுவர் நகர் அருகே மறு சுழற்சியும் செய்யப்படுகிறது. இந்த இரு பகுதிகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுவதாகவும், இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.

திடக்கழிவு மேலாண்மை மையம் மூடல்

இந்த நிலையில் நகராட்சி மூலம் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு குன்னூர் அருகே வள்ளுவர் நகர் பகுதியில் 88 லட்சம் ரூபாய் செலவில் திட கழிவு மேலாண்மை மையத்திற்காக புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

பின்னர் எந்திரங்கள் உள்பட உபகரணங்கள் 55 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்டது. மொத்தம் ஒரு கோடியே 43 லட்சம் ரூபாய் செலவு செய்த திடக்கழிவு மேலாண்மை மையம் 10 ஆண்டுகள் கூட செயல்படாமல் கோடி கணக்கான ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளது. தற்போது பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக இந்த மையம மூடப்பட்டு உள்ளது.

இதேபோல் வள்ளுவர் நகர் பகுதியில் உள்ள நகராட்சி குப்பை மையத்தையும், மூட வேண்டும் என்று சுற்றுப்புற கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story