கிறிஸ்தவர்களின் தவக்கால தொடக்க சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி


கிறிஸ்தவர்களின் தவக்கால தொடக்க சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி
x

பூண்டி மாதா பேராலயத்தில் கிறிஸ்தவர்களின் தவக்கால தொடக்க சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி;

பூண்டி மாதா பேராலயத்தில் கிறிஸ்தவர்களின் தவக்கால தொடக்க சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சாம்பல் புதன்

கிறிஸ்தவர்களின் தவக்காலம் நேற்று தொடங்கியது. தஞ்சை மாவட்டத்தின் பெருமைமிக்க பூண்டி மாதா பேராலயத்தில் நேற்று காலை தவக்கால தொடக்கமாக சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. தீமையில் இருந்து நன்மைக்கும், அநீதியிலிருந்து நீதிக்கும், அவ நம்பிக்கையிலிருந்து நம்பிக்கைக்கும், சாத்தானின் ஆட்சியில் இருந்து இறை ஆட்சிக்கு அழைத்துச் செல்லும் தொடக்க நாளாக சாம்பல் புதன் கருதப்படுகிறது.

நெற்றியில் பூசிக்கொண்டனர்

பூண்டி மாதா பேராலயத்தில் நேற்று காலை சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி பேராலாயஅதிபர் சாம்சன் தலைமையில் நடைபெற்றது. திருப்பலியில் பேராலய துணை அதிபர் ரூபன்அந்தோணிராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர், உதவி பங்குத் தந்தையர்கள் தாமஸ், அன்புராஜ், ஆன்மீக தந்தை அருளானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.திருப்பலி நிறைவடைந்த உடன் கடந்த ஆண்டு குருத்தோலை ஞாயிறுஅன்று பக்தர்கள் வீட்டுக்கு எடுத்து சென்று பாதுகாத்து வந்த குருத்தோலைகளை எரித்து அதிலிருந்து பெறப்பட்ட சாம்பலை புனிதம் செய்து முதலில் திருப்பலியில் கலந்து கொண்ட அருட் தந்தையர்கள் ஒருவருக்கொருவர் பூசிக்கொண்டனர்.தொடர்ந்து திருப்பலியில் கலந்து கொண்ட பக்தர்களின் நெற்றியில் பேராலய அதிபர் பூசினார். திருப்பலியில் கலந்து கொண்ட அருட் தந்தையர்கள் திருப்பலியில் கலந்து கொண்ட பக்தர்கள் நெற்றியில் புனிதம் செய்யப்பட்ட சாம்பலை பூசினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story