ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி ஒளிபரப்பு
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி கோட்டை பூங்காவில் பெரிய திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
வேலூர்
7-வது ஆசிய ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டிகள் நேற்று முதல் வருகிற 12-ந் தேதி வரை சென்னை எழும்பூரில் உள்ள ஸ்டேடியத்தில் நடக்கிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் இந்த போட்டிகள் வேலூர் கோட்டை பூங்காவில் பெரிய எல்.இ.டி. திரையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. நேற்று மாலையில் தென்கொரியா-ஜப்பான், மலேசியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டிகள் ஒளிபரப்பாகின. அதனை பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள் பார்த்தனர்.
இரவு 8.30 மணியளவில் இந்தியா-சீனா அணிகள் மோதின. அதனை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன், ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ., வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆகியோர் பார்த்தனர். அப்போது மாவட்ட விளையாட்டு அலுவலர் நோயலின் ஜான், கலெக்டர் அலுவலக பொதுமேலாளர் பாலாஜி, வேலூர் தாசில்தார் செந்தில் மற்றும் பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story