இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு தர்ணா


இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு  வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு தர்ணா
x

இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.

கடலூர்

ராமநத்தம்,

திட்டக்குடி அருகே உள்ள ராமநத்தம் மேட்டுத்தெருவை சேர்ந்த 8 குடும்பத்தினர் இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்து வந்தனர்.

இந்த நிலையில், கடந்த மாதம் 29-ந்தேதி அந்த பகுதியில் நடந்த மனுநீதி நாள் முகாமில் பங்கேற்ற அமைச்சர் சி.வெ. கணேசனிடமும் அவர்கள் மனு அளித்தனர். இதையடுத்து அவர்களுக்கு மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

ஆனால், அதன் பின்னரும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், நேற்று ராமநத்தம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது வருவாய்த்துறை அதிகாரிகள், மனைப்பட்டா வழங்குவதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது, எனவே விரைவில் வழங்குவதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story