இடப்பிரச்சினைக்கு தீர்வு கேட்டு தேசிய கொடியுடன் மனு கொடுக்க வந்த முதியவர்
இடப்பிரச்சினைக்கு தீர்வு கேட்டு தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு தேசிய கொடியுடன் முதியவர் ஒருவர் மனு கொடுக்க வந்தார்
தேனி
பெரியகுளம் அருகே கீழ வடகரை தெய்வேந்திரபுரத்தை சேர்ந்தவர் சிவனாண்டி (வயது 85). இவர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தார். அவர் கையில் ஒரு தேசிய கொடியை தூக்கி வந்தார். நுழைவு வாயிலில் நின்ற போலீசார் அவரிடம் விசாரித்தனர். அப்போது அவர் தனது நிலத்தை மற்றொரு நபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், நில அளவீடு பணி மேற்கொள்ள நில அளவையர் வராமல் இழுத்தடிப்பதால் அதுகுறித்து மனு கொடுக்க வந்துள்ளதாகவும் தெரிவித்தார். பின்னர் அவர் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்த அரங்குக்கு தேசிய கொடியுடன் சென்று மனு கொடுத்தார்.
Related Tags :
Next Story