சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் மீது தாக்குதல்


சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் மீது தாக்குதல்
x

புதுக்கோட்டை அருகே இரவு ரோந்து பணியின் போது சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேரை தாக்கிய ஆயுதப்படை போலீஸ்காரர், 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை

இரவு ரோந்து பணி

புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளனூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சந்திரன், போலீஸ்காரர் கார்த்திக். இவர்கள் இருவரும் வெள்ளனூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புத்தாம்பூர் டாஸ்மாக் கடைக்கு எதிரே உள்ள பாலத்தில் அமர்ந்து பூங்குடியை சேர்ந்த திருச்சி ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகின்ற அருண்குமார் (வயது 26), சுப்பிரமணி மகன் விஜய் (28), ஊச்சானியை சேர்ந்த ரத்தினம் மகன் பார்த்திபன் (25), மோகன்ராஜ் ஆகிய 4 பேர் மது அருந்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

4 பேர் கைது

இதைப்பார்த்த சந்திரன் மற்றும் கார்த்திக் அவர்களிடம் விசாரணை நடத்த முயன்றனர். அப்போது அருண்குமார் உள்பட 4 பேரும் சேர்ந்து சந்திரன், கார்த்திக் ஆகிய 2 ேபரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசாரை தாக்கிய அருண்குமார் உள்பட 4 பேர் மீதும் வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை அருகே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேரை ஆயுதப்படை போலீஸ்காரர் உள்பட 4 பேர் சேர்ந்து தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story