வீட்டின் முன்பு மது குடித்ததை தட்டிக்கேட்டவர் மீது தாக்குதல்


வீட்டின் முன்பு மது குடித்ததை தட்டிக்கேட்டவர் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 19 Jan 2023 12:15 AM IST (Updated: 19 Jan 2023 3:37 PM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில், வீட்டின் முன்பு மது குடித்ததை தட்டிக்கேட்டவர் மீது தாக்குதல் நடத்திய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறையில், வீட்டின் முன்பு மது குடித்ததை தட்டிக்கேட்டவர் மீது தாக்குதல் நடத்திய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

வீட்டின் முன்பு மது குடித்தனர்

மயிலாடுதுறை சித்தர்காடு சந்தைப்பேட்டை தெருவை சேர்ந்தவர் பெருமாள் மகன் மாதவன்(வயது 35). இவரது வீட்டின் அருகில் வசிக்கும் ெலட்சுமி என்பவரது வீட்டின் முன்பு 4 பேர் சேர்ந்து மது குடித்தனர்.

அதை பார்த்த மாதவனின் மனைவியும், லெட்சுமியும் மதுகுடித்துக்கொண்டு இருந்தவர்களை பார்த்து பேசியுள்ளனர். இதனால் அந்த 4 பேரும் லட்சுமியை முறைத்து பார்த்துள்ளனர்.

அடித்து உதைத்தனர்

அப்போது அங்கு வந்த மாதவன், குடியிருப்பு பகுதியில் வந்து மது குடிக்கலாமா?, வேறு எங்காவது சென்று மது குடியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த 4 பேரும் சேர்ந்து மாதவனை அடித்து உதைத்ததுடன் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

வலைவீச்சு

இந்த சம்பவம் தொடர்பாக மாதவன் கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார், சித்தர்க்காடு ஆலந்துறையப்பர் கோவில் தெருவை சேர்ந்த ஜோதி, அருள், பனந்தோப்பு தெருவை சேர்ந்த ரஷீத், ராஜா ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story