தனியார் நிறுவன ஊழியர் மீது தாக்குதல்; வாலிபர் கைது


தனியார் நிறுவன ஊழியர் மீது தாக்குதல்; வாலிபர் கைது
x

தேவர்குளத்தில் தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் தேவர்குளம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன் (வயது 44). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் பஜாரில் உள்ள கடைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த ஆர்.சி. சர்ச் தெருவை சேர்ந்த ஜெயராஜ் என்பவரது மகன் அஜய் பிரகாஷ் (22), அவரை வழிமறித்து அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மோகன் அளித்த புகாரின் பேரில் தேவர்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜய் பிரகாசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story