இறைச்சி கடைக்காரரை தாக்கி 3 பவுன் சங்கிலி பறிப்பு
இறைச்சி கடைக்காரரை தாக்கி 3 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
மணிகண்டம்:
மணிகண்டம் அருகே உள்ள ஓலையூர் பி.ஆர்.ஜி. நகரை சேர்ந்தவர் விஜயகுமார்(வயது 41). இவர் கே.கே.நகர் அருகே இ.பி. காலனியில் கறிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு கடையை மூடிவிட்டு தனது நண்பர் ஏர்போர்ட் புதுத்தெருவை சேர்ந்த சசிகுமாருடன்(32) மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றார். ஓலையூர் அருகே சென்றபோது அங்கு மறைவான இடத்தில் நின்ற மர்ம நபர்கள் 4 பேர், அவரது மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி, விஜயகுமார் முகத்தில் மிளகாய் பொடியை தூவி உருட்டுக்கட்டையால் 2 ேபரையும் தாக்கி, விஜயகுமாரின் கழுத்தில் கிடந்த 3 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு, தப்பிச்சென்றனர். இது பற்றி தகவல் அறிந்த மணிகண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.