கல்குவாரி மேற்பார்வையாளர் மீது தாக்குதல்; வாலிபர் கைது
முக்கூடல் அருகே கல்குவாரி மேற்பார்வையாளரை தாக்கியதாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி
முக்கூடல்:
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் கொழிஞ்சிவிளையை சேர்ந்தவர் காட்லின் (வயது 27). இவர் அனந்தநாடார்பட்டி பகுதியில் உள்ள கல்குவாரியில் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார். கல்குவாரியில் ஆபரேட்டராக வேலை பார்த்த பள்ளக்கால் பொதுக்குடியை சேர்ந்த மகாராஜா (21) என்பவர் காட்லினை அவதூறாக பேசி கிண்டல் செய்துள்ளார். இதனை கல்குவாரி உரிமையாளரிடம் காட்லின் தெரிவித்ததால் மகாராஜனை வேலையில் இருந்து நிறுத்தியுள்ளனர்.
இந்த முன்விரோதம் காரணமாக நேற்று முன்தினம் மகாராஜா மற்றும் அவருடைய நண்பர்கள் சேர்ந்து கல்குவாரி அருகே வந்து கொண்டிருந்த காட்லினை வழிமறித்து அவதூறாக பேசி தாக்கி மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் பாப்பாக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆப்ரகாம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மகாராஜாவை கைது செய்தார்.
Related Tags :
Next Story