கார் டிரைவர் மீது தாக்குதல்


கார் டிரைவர் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 6 Sept 2023 1:00 AM IST (Updated: 6 Sept 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஓசூர்:-

ஓசூர் நியூ டெம்பிள் அட்கோவை சேர்ந்த காளிராஜ் என்கிற சுந்தர் (வயது 27), கார் டிரைவர். இவர் மூக்கண்டப்பள்ளி பகுதியில் நண்பர்களுடன் வந்து கொண்டிருந்தார். அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவர்களுக்கும், காளிராஜ் தரப்பினருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.

இதற்கிடையே நேற்று முன்தினம் சின்ன கோட்டை மாரியம்மன் கோவில் அருகில் இருந்த காளிராஜை ஓசூர் தேர்பேட்டையை சேர்ந்த அப்பு என்பவர் தாக்கியதாக தெரிகிறது. மேலும் காரின் கண்ணாடியை உடைத்து சேதப்படுததியதாகவும் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த காளிராஜ் சிகிச்சைக்காக ஓசூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து காளிராஜ் கொடுத்த புகாரின் பேரில் ஓசூர் டவுன் போலீசார் அப்பு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story