சேலத்தில் கல்லூரி மாணவர் மீது தாக்குதல்-போலீசார் விசாரணை


சேலத்தில் கல்லூரி மாணவர் மீது தாக்குதல்-போலீசார் விசாரணை
x

சேலத்தில் கல்லூரி மாணவர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம்

சேலம் திருமலைகிரியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 18). இவர் வின்சென்ட் பகுதியில் உள்ள சேலம் அரசு கலைக்கலூரியில் பி.ஏ. ஆங்கிலம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 16-ந் தேதி கல்லூரி அருகே விக்னேஷ் தனது நண்பர்களுடன் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் திடீரென விக்னேசை தாக்கிவிட்டு தப்பி சென்று விட்டனர்.

இதுதொடர்பாக அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story