வேடசந்தூர் இடத்தகராறில் மாற்றுத்திறனாளி மீது தாக்குதல்


வேடசந்தூர் இடத்தகராறில் மாற்றுத்திறனாளி மீது தாக்குதல்
x
தினத்தந்தி 2 July 2023 2:30 AM IST (Updated: 2 July 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் இடத்தகராறில் மாற்றுத்திறனாளியை தாக்கிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

திண்டுக்கல்

வேடசந்தூர் எஸ்.ஏ.பி. நகரை சேர்ந்தவர் நெல்சன் (வயது 35). மாற்றுத்திறனாளியான இவர், ரியல் எஸ்டேட் தரகராகவும் இருந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர், தனது வீட்டின் முன்பு அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கும்பல், திடீரென நெல்சனை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து ஓடி விட்டனர். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் அந்த கும்பலை சேர்ந்தவர்கள், அடுத்த தெருவில் உள்ள முன்னாள் ராணுவ வீரர் பாண்டி (55) என்பவரின் வீட்டு கேட்டின் மீது ஏறி குதித்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவரது மோட்டார் சைக்கிளை இரும்பு கம்பியால் சேதப்படுத்தினர். இந்த சம்பவங்கள் குறித்து நெல்சன், பாண்டி ஆகியோர் வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் வேடசந்தூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த பிரபாகரன் (23), சந்தோஷ் (22), ஆகாஷ் (20) ஆகியோர் இடத்தகராறு காரணமாக தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story