முதியவர் மீது தாக்குதல்; வாலிபர் கைது


முதியவர் மீது தாக்குதல்; வாலிபர் கைது
x

வள்ளியூர் அருகே முதியவர் மீது தாக்குதல் நடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

வள்ளியூர் (தெற்கு):

வள்ளியூர் அருகே கண்ணநல்லூர் பனிச்சகுளம் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர்கள் பால்பாண்டியன் (வயது 82), மகாராஜன் (27). இவர்கள் அருகருகே உள்ள வீடுகளில் வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று மகாராஜனுக்கு சொந்தமான ஆடுகள், பால்பாண்டியனின் வீட்டு வளாகத்துக்குள் புகுந்து தென்னங்கன்றுகளை மேய்ந்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

உடனே பால்பாண்டியன் அந்த ஆடுகளை விரட்டினார். இதனால் ஆத்திரமடைந்த மகாராஜன், பால்பாண்டியனை அவதூறாக பேசி, கம்பால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், வள்ளியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சகாயராபின் ஷாலு வழக்குப்பதிவு செய்து மகாராஜனை கைது செய்தார்.


Next Story