மின்வாரிய உதவி என்ஜினீயர் மீது தாக்குதல்
மயிலாடுதுறையில் மின்வாரிய உதவி என்ஜினீயரை தாக்கிய தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மயிலாடுதுறையில் மின்வாரிய உதவி என்ஜினீயரை தாக்கிய தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மயிலாடுதுறையில் மின்வாரிய உதவி என்ஜினீயரை தாக்கிய தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மின்வாரிய உதவி என்ஜினீயர்
நாகை மாவட்டம் வேதாரண்யம் தேத்தாகுடி பகுதி சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 50). இவர் மயிலாடுதுறை மின்சாரவாரிய அலுவலகத்தில் உதவி என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். நேற்றுமுன்தினம் ரங்கசாமி பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் அருள்ஜோதி மற்றும் அவரது சகோதரர் காமராஜ் ஆகிய 2 பேரும், மின் இணைப்பு கேட்டு விண்ணப்பத்தும் இணைப்பு தராமல் ஏன் தாமதம் செய்கிறீர்கள் என்று ரங்கசாமியிடம் கேட்டுள்ளனர். அதற்கு ரங்கசாமி உரிய ஆவணங்கள் இல்லாமல் மின் இணைப்பு வழங்க இயலாது என்று கூறினார்.
தாக்குதல்
இதனால் ரங்கசாமிக்கும், அருள்ஜோதிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அருள்ஜோதி தான் வைத்திருந்த செல்போனை எடுத்து ரங்கசாமி மீது வீசி தாக்கிவிட்டு அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து உதவி என்ஜினீயர் ரங்கசாமி மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அருள்ஜோதி, காமராஜ் ஆகிய 2 பேர் மீதும் மயிலாடுதுறை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.