பெண் சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்
பெண் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அகரமாங்குடி உச்சிமேட்டு தெருவை சேர்ந்தவர் சசிரேகா (வயது 30). இவர் தஞ்சை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் புகழ்வேந்தன். இவர் மருத்துவ பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் புகழ்வேந்தனுக்கும் திருச்சி உறையூர் பகுதியில் உள்ள ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதாக சசிரேகாவுக்கு தெரியவந்தது. சம்பவத்தன்று இவர் உறையூரில் உள்ள அந்த பெண் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அங்கு புகழ்வேந்தன் இருந்தார். இதுபற்றி கேட்டபோது, கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த புகழ்வேந்தன் சசிரேகாவை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து சசிரேகா கொடுத்த புகாரின்பேரில் உறையூர் போலீசார், புகழ்வேந்தன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.