நெடுஞ்சாலைத்துறை அதிகாரி மீது தாக்குதல்


நெடுஞ்சாலைத்துறை அதிகாரி மீது தாக்குதல்
x

சேரன்மாதேவி நெடுஞ்சாலைத்துறை அதிகாரியை மர்மநபர்கள் தாக்கினர்.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி பேரூராட்சிக்குட்பட்ட சந்தன மாரியம்மன் கோவில் தெரு முதல் அம்மநாதன்சாமி கோவில் தெரு வரை நெடுஞ்சாலை துறை மூலம் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இச்சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்ய நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் நாகராஜன் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அங்குள்ள ஒரு விவசாயிக்கும், அதிகாரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உதவி பொறியாளர் நாகராஜன், மோட்டார் சைக்கிளில் திரும்பி சென்றார். அப்போது அவரை வழிமறித்து அடையாளம் தெரியாத 3 நபர்கள் தாக்கியுள்ளனர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் சேரன்மாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story