மது கேட்டு உரிமையாளர், ஊழியர் மீது தாக்குதல்


மது கேட்டு உரிமையாளர், ஊழியர் மீது தாக்குதல்
x
சேலம்

சங்ககிரி:-

உத்தரபிரதேசம் மாநிலம் உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்தவர் ரத்தீபன்யாதவ் (வயது 31). இவர் சங்ககிரி அருகே வைகுந்தம் பகுதியில் தாபா ஓட்டல் நடத்தி வருகிறார். இதில் நேற்று முன்தினம் இரவு கணக்கிச்சிபாளையம் பகுதியை சேர்ந்த அழகேசன் (28) அவரது நண்பர்கள் பிரதீப் (21), தங்கவேல்(38), விஜய் ஆகியோர் வந்து மது கேட்டுள்ளனர். அதற்கு ரத்தீபன்யாதவ் இங்கு மதுவிற்பனை செய்வது இல்லை என்று கூறி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் தகாத வார்த்தையால் திட்டி ரத்தீபன்யாதவ், ஊழியர் அஞ்சீத்யாதவ் ஆகியோரை தாக்கி உள்ளனர். மேலும் தாபா ஓட்டலின் கண்ணாடி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கினர். இதுகுறித்து ரத்தீபன்யாதவ் சங்ககிரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீராமன் வழக்குப்பதிவு செய்து அழகேசன், பிரதீப், தங்கவேல் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவான விஜயை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story