ஜவுளி கடை ஊழியர் மீது தாக்குதல்-போலீசார் விசாரணை


ஜவுளி கடை ஊழியர் மீது தாக்குதல்-போலீசார் விசாரணை
x

ஜவுளி கடை ஊழியர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம்

ராஜஸ்தானை சேர்ந்தவர் தர்மிசந்த் (வயது 48). இவர் சேலம் ஆசாரி தெருவில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு வேலை முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது 3 பேர் அவரை வழிமறித்து, அவரிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். அவர் பணம் தர மறுத்து உள்ளார். இதனால் அவர்கள் 'நீ ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் தானே' என்று கூறி தாக்கினர். இதில் காயம் அடைந்த தர்மிசந்த் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சில வியாபாரிகள் தாக்குதல் நடத்திய ஒருவரை பிடித்து சேலம் டவுன் போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் அஸ்தம்பட்டி கோர்ட்டு ரோடு பகுதியை சேர்ந்த முகமது உக்சா (28) என்பது தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர்.


Next Story