டிராவல்ஸ் உரிமையாளர் மீது தாக்குதல்
முத்தையாபுரம் அருகே டிராவல்ஸ் உரிமையாளர் மீது தாக்குதல் நடத்திய ஐந்து பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் சண்முகபுரத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் பொன்ராஜ் (வயது 25). இவர் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் பொன்ராஜ், அவரது பெரியப்பா மகள் சந்திரா வீட்டிற்கு செல்வதற்காக, அவரது சித்தப்பா மகன் ஸ்டீபன் என்பவருடன் இரவு தங்கம்மாள் புரத்தில் உள்ள சர்ச் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது தங்கம்மாள் புரத்தைச் சேர்ந்த சிவபாலன் என்பவர் ஸ்டீபனை நிறுத்தி அழைத்து பேசிக் கொண்டிருந்தார். அங்கு நின்ற ராஜேந்திரன் என்பவர் பொன்ராஜை பார்த்து நீ எப்படி எங்க ஊருக்கு வரலாம்? என்று அவதூறாக பேசி அவரை கையால் தாக்கியுள்ளார்.அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த சிவ பாலன், முனியசாமி, மாரி லிங்கம், அந்தோணி ஆகியோரும் சேர்ந்து பொன்ராஜை தாக்கியுள்ளனர். இதை பார்த்த ஸ்டீபன் ஓடிச் சென்று சண்முகபுரத்தில் இது குறித்து கூறியுள்ளார். அங்கிருந்து முருகன், பிரவீன், கருத்த பாண்டி ஆகியோர் வந்துள்ளனர். அவர்களையும் அந்த 5பேர் கும்பல் கைகளாலும், கம்பாலும் தாக்கியுள்ளனர். இதை அக்கம் பக்கத்தினர் கண்டித்தவுடன், பொன்ராஜூவுக்கு அவர்கள் கொலைமிரட்டல் விடுத்துவிட்டு தப்பி சென்றுவிட்டனராம். காயமடைந்த பொன்ராஜ், முருகன், பிரவீன் கருத்த பாண்டி ஆகியோர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இது குறித்த புகாரின் பேரில் ராஜேந்திரன், சிவபாலன், முனியசாமி, மாரிலிங்கம், அந்தோண் ஆகிய 5 பேர் மீது முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.