மனைவி-மகள் மீது தாக்குதல்; தொழிலாளி கைது


மனைவி-மகள் மீது தாக்குதல்; தொழிலாளி கைது
x

மனைவி-மகளை தாக்கிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

மானூர்:

மானூர் அருகே உள்ள உக்கிரன்கோட்டையை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (வயது 43). கூலித்தொழிலாளி. இவரது 2-வது மனைவி தனலட்சுமி (38). பொன்னுச்சாமிக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று பொன்னுச்சாமி மது குடிப்பதற்கு தனலட்சுமியிடம் பணம் கேட்டு உள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பொன்னுச்சாமி தனது மனைவி தனலட்சுமியை அடித்து உதைத்தார். இதைதடுக்க வந்த அவரது மகள் கலைச்செல்வியையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் காயம் அடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதுதொடர்பான புகாரின் பேரில் மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பொன்னுச்சாமியை கைது செய்தனர்.


Next Story