பெண் மீது தாக்குதல்; தம்பி-மனைவி மீது வழக்கு


பெண் மீது தாக்குதல்; தம்பி-மனைவி மீது வழக்கு
x
தினத்தந்தி 6 May 2023 12:30 AM IST (Updated: 6 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

வடமதுரை அருகே பெண் மீது நடந்த தாக்குதலில் அவருடைய தம்பி-மனைவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல்


திருப்பூர் மாவட்டம் நெரிபெருக்கல் அருகே வேளாங்காடு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் குணவதி (வயது 50). இவருக்கும் வடமதுரை அருகே ஜி.குரும்பப்பட்டியில் வசிக்கும் அவரது தம்பி ராமச்சந்திரன் என்பவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று குணவதி ஜி.குரும்பப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார். அப்போது அங்கு வந்த ராமச்சந்திரன் மற்றும் அவருடைய மனைவி மகேஸ்வரி ஆகியோர் குணவதியிடம் தகராறில் ஈடுபட்டதுடன் அவரை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த குணவதி திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் சம்பவம் குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் ராமச்சந்திரன், மகேஸ்வரி ஆகியோர் மீது வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.



Next Story