குடும்ப தகராறில் பெண் மீது தாக்குதல்
பெரியகுளத்தில் குடும்ப தகராறில் பெண் மீது தாக்குதல் நடத்திய கணவர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தேனி
பெரியகுளம் தென்கரை பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் ஹாரூன் ரசீத் (வயது 31). இவரது மனைவி ஜான்சி ராணி (26). இவர்களுக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது. ஒரு வயதில் பாசித் என்ற குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் ஜான்சிராணியை, ஹாரூன் ரசீத் தகாத வார்த்தையில் பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு உதவியாக 4 பேர் இருந்ததாக தெரிகிறது. பின்னர் படுகாயம் அடைந்த ஜான்சி ராணி சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அவர் தென்கரை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் ஹாரூன் ரசீத் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story