தொழிலாளி மீது தாக்குதல்


தொழிலாளி மீது தாக்குதல்
x

திருக்குறுங்குடி அருகே தொழிலாளி மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

திருநெல்வேலி

ஏர்வாடி:

திருக்குறுங்குடி அருகே உள்ள வடுகச்சிமதில், பசும்பொன் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் தங்கபாஸ்கர் (வயது 27). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று மாலை இவர் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பினார். அப்போது அவரது குழந்தை தனது கையில் காலி புகையிலை பாக்கெட்டை வைத்து விளையாடி கொண்டிருந்தாள். இதைப்பார்த்த தங்கபாஸ்கர் குழந்தையிடம் கேட்டபோது, அப்பகுதியை சேர்ந்த சுடலைக்கண்ணு மகன் மணிகண்டன் என்பவர் நடத்தி வரும் மளிகை கடைக்கு அருகில் இருந்து புகையிலை பாக்கெட்டை எடுத்ததாக தெரிவித்தாள். இதையடுத்து தங்கபாஸ்கர், மணிகண்டன் கடைக்கு சென்று அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை குழந்தைகள் வரும் இடத்தில் வைக்கலாமா? என்று தட்டிக் கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன், தங்கபாஸ்கரை அவதூறாக பேசி, இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார். இதில் காயமடைந்த தங்கபாஸ்கர் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சுப்புராமகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை தேடி வருகிறார்.


Next Story