தொழிலாளி மீது தாக்குதல்


தொழிலாளி மீது தாக்குதல்
x

தொழிலாளியை தாக்கிய 2 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.

திருநெல்வேலி

ஏர்வாடி:

ஏர்வாடி அருகே உள்ள மாவடி புதூரை சேர்ந்தவர் லிங்கதுரை மகன் ராஜாகுமார் (வயது 41). கூலி தொழிலாளி. மாவடியை சேர்ந்தவர்கள் சிவலிங்கம், அருண். இவர்கள் இருவரும் மாவடி-டோனாவூர் சாலையில் அதிக வேகத்தில் விபத்தை ஏற்படுத்துவது போல், மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது.

இதனை ராஜாகுமார் தட்டிக் கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த சிவலிங்கமும், அருணும் சேர்ந்து ராஜாகுமாரை தாக்கினர்.

இதுபற்றி அவர் திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவலிங்கம், அருண் ஆகிய இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story