நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வரவேண்டும்


நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வரவேண்டும்
x

நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வரவேண்டும்

திருவாரூர்

நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வரவேண்டும் என அ.தி.மு.க.அவை தலைவர் தமிழ்மகன்உசேன் கூறினார்.

சிறப்பு தொழுகை

எடப்பாடி பழனிசாமி மீண்டும் தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்கவேண்டி, அ.தி.மு.க. அவை தலைவர் தமிழ்மகன் உசேன் 75 மாவட்டங்களில் ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி நேற்று திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் பெரியபள்ளிவாசல் மற்றும் தர்காவில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. முன்னிலையில், தமிழ்மகன் உசேன் மற்றும் அ.தி.மு.க.வினர் சிறப்பு தொழுைக நடத்தினர்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க. என்றைக்குமே மக்கள் சக்தி கொண்ட இயக்கமாகவே இருந்து வருகிறது. இந்த இயக்கம் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற ஆளுமை மிக்க தலைவர்களால் கட்டிக்காக்கப்பட்ட இயக்கம். தற்போது இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவாலும், அ.தி.மு.க.தொண்டர்களாலும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பொதுச்செயலாளராக

விரைவில் பொதுச்செயலாளராக அவர் தேர்வு செய்யப்பட வேண்டும். நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வர வேண்டும். மீண்டும் அ.தி.மு.க.அமோக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்க வேண்டும் என்பதற்காக இதுவரை21 மாவட்டங்களில் உள்ள பள்ளிவாசல் மற்றும் தர்காவில் தொழுகை நடத்தி உள்ளோம். 22-வது மாவட்டமாக திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் உள்ள பள்ளிவாசல் மற்றும் தர்காவில் தொழுகை செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்துகொண்டவர்கள்

நிகழ்ச்சியில் நகர செயலாளர் ராஜசேகரன், துணை செயலாளர் கொய்யாமீராமைதீன், பொருளாளர் சுவாமிநாதன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் முகமது அஸ்ரப், முன்னாள் நகர செயலாளர் பசீர்அகமது, முன்னாள் நகர துணை செயலாளர் உதயகுமார், நகர ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் காளிதாஸ் மற்றும் அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.


Next Story