நாளை சட்டமன்ற தேர்தல்:கர்நாடக மாநில பணியாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறைஈரோடு தொழிலாளர் உதவி ஆணையாளர் தகவல்
சட்டமன்ற தேர்தலை ஒட்டி கர்நாடக மாநில பணியாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்கப்படுகிறது.
ஈரோடு
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் பொது நிறுவனங்களில் பணிபுரியும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தினக்கூலி தொழிலாளர்கள், தற்காலிக மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்பட அனைத்து பணியாளர்களுக்கும் வாக்களிக்கும் வகையில் தேர்தல் தினத்தன்று சம்பளத்துடன் கூடிய ஒருநாள் விடுமுறை அளிக்க வேண்டும்.
இந்த தகவலை ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) வெ.மு.திருஞானசம்பந்தம் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story