மாணவிகளிடம் மாரிமுத்து எம்.எல்.ஏ. குறைகளை கேட்டார்
திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையத்தில் மாணவிகளிடம் மாரிமுத்து எம்.எல்.ஏ. குறைகளை கேட்டார்.
திருவாரூர்
திருத்துறைப்பூண்டி;
திருத்துறைப்பூண்டி பகுதியில் 10-க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகள் மாலை பள்ளி முடிந்த உடன் பஸ்சுக்காக திருத்துைறப்பூண்டி புதிய பஸ் நிலையத்தில் காத்திருக்கும் நிலை உள்ளது. இதனால் பஸ் வரும் போது மாணவ- மாணவிகள் முண்டியடித்துக்கொண்டு பஸ்சில் ஏறுவதும் வழக்கமாக உள்ளது. இது குறித்து தகவல் அறிந்த மாரிமுத்து எம்.எல்.ஏ. மாலை திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கு பஸ்சுக்காக காத்திருந்த மாணவிகளிடம் குறித்த நேரத்தில் பஸ்கள் வருகிறதா? எவ்வளவு நேரமாக பஸ்சுக்காக காத்திருக்கிறீர்கள்? என கேட்டறிந்தார். பின்னர் அரசு பேருந்து அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி மாணவ- மாணவியர்களுக்கு குறித்த நேரத்தில் தட்டுப்பாடு இல்லாமல் பஸ்கள் இயக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
Related Tags :
Next Story