கோவில் அர்ச்சகர்கள் கூட்டம்
நீடாமங்கலத்தில் கோவில் அர்ச்சகர்கள் கூட்டம்
திருவாரூர்
நீடாமங்கலம்:
நீடாமங்கலம் சந்தான ராமசாமி கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஒரு கால பூஜை திட்டம் அர்ச்சகர் மற்றும் பூசாரிகள் கலந்தாய்வு கூட்டம் சரக ஆய்வாளர் ராசி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அர்ச்சகர் மற்றும் பூசாரிகள் கோவில் சென்று கோவிலுடன் சேர்த்து புகைப்படம் எடுத்து தினசரி அனுப்ப வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை கூறியுள்ளது. இதற்கு எங்களுக்கு உடன்பாடு கிடையாது. அதேபோல் அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகள் எங்களிடம் அனைவரிடமும் ஸ்மார்ட் போன் கிடையாது. இது சாத்தியப்படாத ஒன்று என்றும் தெரிவித்தார்கள். அதையடுத்து தனிப்பட்ட முறையில் அனைவரும் அவரவர்கள் பூஜை செய்யும் கோவில் பெயருடன் மனு எழுதி தக்காரிடம் கொடுத்தனர்.
Related Tags :
Next Story