அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான சுமார் ரூ.42 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை தகவல்


அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான சுமார் ரூ.42 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை தகவல்
x
தினத்தந்தி 18 July 2023 6:43 PM IST (Updated: 18 July 2023 7:08 PM IST)
t-max-icont-min-icon

அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான சுமார் ரூ.42 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடியிடம் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில்,

அமலாக்கத்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,

* அமைச்சர் பொன்முடிக்குச் சொந்தமான 7 இடங்களில் சோதனை நடத்தினோம். அவருக்குச் சொந்தமான ரூ.42 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

* சோதனையின் போது ரூ.81.7 லட்சம், ரூ.13 லட்சம் மதிப்பு வெளிநாட்டுப் பணம், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

* ரூ.41.9 கோடி நிரந்த வைப்புத்தொகை, ரூ.81.7 லட்சம் மதிப்புள்ள ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

* பொன்முடி மகன், உறவினர்கள், பினாமி பெயர்களில் 5 இடங்களில் சட்டவிரோதமாக மண் குவாரிகள் இருந்தன.

* இந்தோனேசியா, ஐக்கிய அரபு அமீரக நிறுவனங்கள் மூலமாகவும் முறைகேடு நடந்துள்ளது.

* இந்தோனேசிய நிறுவனத்தை ரூ.41.5 லட்சத்திற்கு வாங்கி 2022-ல் ரூ.100 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

* ரூ.13 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் இருந்தது குறித்து விளக்கம் அளிக்கப்படவில்லை.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Next Story