மாற்று வழி அமைக்க உதவி கலெக்டர் ஆய்வு
நாட்டறம்பள்ளி அருகே ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிக்காக மாற்று வழி அமைக்க உதவி கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பத்தூர்
நாட்டறம்பள்ளி அருகே சோமநாயக்கன்பட்டி பகுதியில் சுமார் ரூ.18 கோடி மதிப்பீட்டில் புதிய ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதனால் திருப்பத்தூர் -நாட்டறம்பள்ளி செல்ல தற்காலிக மாற்றுவழி அமைப்பது குறித்து திருப்பத்தூர் உதரி கலெக்டர் பானு தலைமையில் வருவாய்த் துறையினர் ஆய்வு மேற்கொண்டார்.
நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார், மண்டல துணை தாசில்தார் நடராஜன், வருவாய் ஆய்வாளர் அன்னலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் அருணா, மற்றும் உதவி கோட்ட பொறியாளர் அண்ணாமலை உள்பட வருவாய் துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story