மழைக்கு வீடு இடிந்து விழுந்து பாதிக்கப்பட்டவருக்கு உதவித்தொகை
ஆதியூர் ஊராட்சியில் மழைக்கு வீடு இடிந்து விழுந்து பாதிக்கப்பட்டவருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.
திருப்பத்தூர்
கந்திலி ஒன்றியம் ஆதியூர் ஊராட்சி காலனி பகுதியில் வசிப்பவர் சாந்தி சீனிவாசன். நேற்று பெய்த மழைக்கு இவர்களின் வீட்டு சுவர் திடீரென இடிந்து விழுந்தது.
இதனால் வீடு இழந்த சாந்தி சீனிவாசனுக்கு ஆதியூர் ஒன்றிய கவுன்சிலரும், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவருமான டாக்டர் லீலா சுப்பிரமணியம், ஷெம்போர்டு பள்ளி தலைவர் கே.எம்.சுப்பிரமணியம் ஆகியோர் அரிசி,மளிகை பொருட்கள் மற்றும் உதவித்தொகை வழங்கினார்கள்.
அப்போது ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை ஆனந்தகுமார், துணைத் தலைவர் பழனிவேல் உள்பட பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story