தனியார் பொருட்காட்சியில் உதவி கலெக்டர் ஆய்வு


தனியார் பொருட்காட்சியில் உதவி கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 17 July 2023 12:30 AM IST (Updated: 17 July 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் தனியார் பொருட்காட்சியில் உதவி கலெக்டர் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோடு சர்க்கஸ் மைதானத்தில் தனியார் பொருட்காட்சி நேற்று முன்தினம் தொடங்கியது. கோவில்பட்டி உதவி கலெக்டர் ஜெயா, தாசில்தார் லெனின், வருவாய் ஆய்வாளர் ராஜசேகர் மற்றும் நகராட்சி, போலீசார் அங்கு சென்றனர். அப்போது, அங்கிருந்த பொறுப்பாளர்களிடம் உதவி கலெக்டர் விசாரணை நடத்தினார். அப்போது பொருட்காட்சி நடத்துவதற்கு எந்தவித அனுமதியும் அரசுத் துறையில் பெறவில்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து பொருட்காட்சியில் இருந்த டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அங்கிருந்த பொதுமக்களும் வெளியேற அறிவுறுத்தப்பட்டனர். மேலும் முறையான அனுமதி பெற்று பொருட்காட்சியை நடத்த வேண்டும் என தெரிவித்து அதுவரை பொருட்காட்சி திடலை திறக்க கூடாது என எச்சரிக்கை விடுத்தனர்.


Next Story