பட்டாசு கடைகளில் உதவி கலெக்டர் ஆய்வு


பட்டாசு கடைகளில் உதவி கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 23 Oct 2022 1:15 AM IST (Updated: 23 Oct 2022 1:16 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூரில் பட்டாசு கடைகளில் உதவி கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

சேலம்

ஆத்தூர்:-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆத்தூர் பஸ் நிலையம் புதிய பஸ் நிலையம் கடை வீதி ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நேற்று ஆத்தூர் உதவி கலெக்டர் சரண்யா திடீரென பட்டாசு கடைகளில் ஆய்வு நடத்தினார். அப்போது தீயணைக்கும் கருவிகள், வாளிகளில் மணல், தண்ணீர் பாதுகாப்பு சாதனங்கள் உள்ளதா? என ஆய்வு செய்தார். மேலும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். வெளியே வைத்து பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது என எச்சரித்தார். அவருடன் ஆத்தூர் தாசில்தார் மாணிக்கம் மற்றும் வருவாய்த்துறையினர் உடன் சென்றனர்.


Next Story