உதவி கலெக்டர் ஆய்வு


உதவி கலெக்டர் ஆய்வு
x

ஆலங்குளம் அரசு மகளிர் கல்லூரியில் உதவி கலெக்டர் ஆய்வு

தென்காசி

ஆலங்குளம்:

வாடகை கட்டிடத்தில் தற்காலிகமாக இயங்கும் ஆலங்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதிய வகுப்பறைகள் இல்லை என்ற காரணத்தைக் கூறி 500-க்கும் மேற்பட்ட மாணவிகளை 25 கி.மீ தொலைவில் உள்ள நெல்லை ராணி அண்ணா மகளிர் கல்லூரிக்கு சென்று பயில உத்தரவிடப்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாக மாணவிகள் தொடர் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் கலெக்டர் ஆகாஷ் உத்தரவின் பேரில் தென்காசி உதவி கலெக்டர் கங்காதேவி கல்லூரி செயல்படும் ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கட்டிடத்தை ஆய்வு செய்தார். அப்போது அங்கேயே போதிய இடம் இருப்பதும், தொடர்ந்து மாணவிகள் இங்கேயே தங்கள் கல்வியைத் தொடரலாம் என்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து கட்டிட உரிமையாளரிடம் இது தொடர்பாக பேசி முடிவு எடுக்கப்பட்டது. தொடர்ந்து பேசிய உதவி கலெக்டர் கல்லூரி காலை, மாலை என இரு பிரிவுகளாக நடைபெறும் என கூறினார்.

ஆய்வின்போது தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் பொ.சிவபத்மநாதன், ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால், ஒன்றிய குழுத்தலைவர் திவ்யா மணிகண்டன், கோட்டப் பொறியாளர் காளீஸ்வரன் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story