உதவி இயக்குனர் ஆய்வு


உதவி இயக்குனர் ஆய்வு
x

மேலசெவலில் வளர்ச்சி திட்டப்பணிகளை உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

மேலசெவல் பேரூராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மாஹின் அபூபக்கர் ஆய்வு செய்தார். உதவி செயற்பொறியாளர் முகமது சரிப், உதவி பொறியாளர் சிவசங்கரலிங்கம், பேரூராட்சி தலைவர் அன்னபூரணி, செயல் அலுவலர் லோபாமுத்திரை மற்றும் கவுன்சிலர்கள் உடன் இருந்தனர்.

முன்னதாக மேலசெவல் பேரூராட்சி சாதாரண கூட்டம், தலைவர் அன்னபூரணி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் வசந்தகுமாரி, செயல் அலுவலர் லோபாமுத்திரை மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேரூராட்சியில் அடிப்படை வசதிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.


Next Story