உதவி பேராசிரியர் நியமனம்: பழைய அறிவிப்பாணை ரத்து
உதவி பேராசிரியர் நியமனம் தொடர்பான பழைய அறிவிப்பாணையை தமிழக அரசு ரத்துச் செய்துள்ளது
சென்னை,
தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் மற்றும் பேராசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். முன்னதாக கடந்த 2019ம் ஆண்டில் 2,331 உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப 2019ம் ஆண்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் 4,000 கல்லூரி துணை பேராசிரியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கை விரைவில் தொடங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார்.
அதன்படி தற்போது புதிதாக 4 ஆயிரம் பேரை நியமனம் செய்ய அரசாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து 2019ம் ஆண்டு வெளியிடப்பட்ட உதவி பேராசிரியர் நியமனம் தொடர்பான பழைய அறிவிப்பாணையை தமிழக அரசு ரத்துச் செய்துள்ளது.
Related Tags :
Next Story