ஆலங்குடி அரசு மருத்துவமனையில் இணை இயக்குனர் ஆய்வு
ஆலங்குடி அரசு மருத்துவமனையில் இணை இயக்குனர் ஆய்வு செய்தார்.
ஆலங்குடி அரசு மருத்துவமனையில் புதுக்கோட்டை இணை இயக்குனர் (மருத்துவம் மற்றும் நலப்பணிகள்) டாக்டர் ராமு நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளை பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், மொத்தம் 6 மருத்துவர்கள் இங்கு பணியாற்ற வேண்டும் என்றும், அதில் 5 மருத்துவர்கள் தற்போது உள்ளார்கள். ஒரு மருத்துவர் கூடிய விரைவில் நியமிக்கப்படும். இந்த மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்றிதழ் தரதேர்வு செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு அடிப்படை வசதிகள் செய்வதற்கு அதிக அளவில் தொகைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை கூடத்திற்கு உடற்கூறு செய்யப்படும் மருத்துவர்கள் தேவை என்று கேட்டதற்கு உடனடியாக மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார். ஆய்வின் போது புதுக்கோட்டை தேசிய நலவாழ்வு குழும ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் சரவணன் மற்றும் ஆலங்குடி மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், அலுவலக பணியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.