அரசு மருத்துவமனையில் இணை இயக்குனர் ஆய்வு
நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் இணை இயக்குனர் ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர்
நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் நாட்டறம்பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் சுமார் 300-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அறுவை சிகிச்சை செயபவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று திருப்பத்தூர் மாவட்ட பொது சுகாதார மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனைக்கு வந்த புறநோயாளிகளிகள், உள்நோயாளிகளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும், கழிவறைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார். ஆய்வின் போது நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் எஸ்.திலீபன் மற்றும் டாக்டர் பாலகிருஷ்ணன், சுகாதார செவிலியர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story