அரசு மருத்துவமனையில் இணை இயக்குனர் ஆய்வு
நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் இணை இயக்குனர் ஆய்வு செய்தார்.
நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் திருப்பத்தூர் மாவட்ட மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது தமிழக முதல்-அமைச்சரின் விரிவான காப்பீடு திட்டம், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் வருகைப்பதிவு, மருந்துகள், நிதிநிலை பயன்பாடு, புற நோயாளிகள், உள் நோயாளிகள் வருகை ஆகியவற்றை ஆய்ரு செய்தார்.
தொடர்ந்து நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவினை உண்டு தரத்தை ஆய்வு செய்தார். பின்னர் மகப்பேறு மரணம் தடுத்தல், இளம் வயது திருமணம் மற்றும் இளம் வயது கர்ப்பம் தடுத்தல், சரி விகித பாலினம் உண்டாக்குதல், கர்ப்பிணி தாய்மார்கள் 6-வது மற்றும் 8-வது மாதம் வரையிலான கருக் கலைப்பு தடுத்தல், இரு குழந்தைகளுக்கு பிறகு நிரந்தர குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தல் குறித்து என மிக ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிகிச்சைக்கு வரும் பொதுமக்களிடம் அன்போடு, தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என அறிவுரைகளை வழங்கினார்.