சங்க கூட்டம்
விற்பனையாளர்கள் சங்க மகாசபை கூட்டம் சத்திரப்பட்டியில் நடந்தது.
விருதுநகர்
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி வட்டார பேண்டேஜ் துணி விற்பனையாளர்கள் சங்க மகாசபை கூட்டம் சத்திரப்பட்டியில் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் செந்தில்வேல்குரு தலைமை தாங்கினார். முன்னாள் துணைத்தலைவர் தங்கமணி முன்னிலை வகித்தார். பொருளாளர் பாலசுப்பிரமணியம் வரவேற்றார். கூட்டத்தில் வரவு, செலவு கணக்கு சரி பார்த்து ஒப்புதல் பெறப்பட்டது. தீர்மானத்தை செயலாளர் ஆறுமுகக்கனி வாசித்தார். கூட்டத்தில் நிர்வாகிகள், கமிட்டியினர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் துணைச்செயலாளர் ஆனந்தமுருகன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story