கலை இலக்கிய சங்க கூட்டம்


கலை இலக்கிய சங்க கூட்டம்
x
தினத்தந்தி 2 Dec 2022 12:15 AM IST (Updated: 2 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கலை இலக்கிய சங்கத்தின் மாவட்ட அமைப்பு கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது.

சிவகங்கை

தமிழ்நாடு கலை இலக்கிய சங்கத்தின் மாவட்ட அமைப்பு கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது. இளங்கோ தலைமை தாங்கினார். ரத்தினம் மற்றும் கருவாச்சி குணாவின் பாடலுடன் கூட்டம் தொடங்கியது. மாநில அமைப்பாளர் சங்கர சுப்பிரமணியன் அமைப்பை அறிமுகப்படுத்தி பேசினார். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி மாவட்ட அமைப்பாளராக சிவபெருமாள், மாவட்ட நிதிக்காப்பாளராக லெனின் உள்ளிட்ட 31 பேர் கொண்ட மாவட்ட அமைப்புக்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது.

வருகிற 11-ந் தேதி முதல் மாவட்ட மாநாட்டை நடத்துவது, மாநிலக்குழு முடிவின்படி ஒரு லட்சம் ரூபாயை திரட்டுவது, 18-ந் தேதி திண்டுக்கல்லில் நடைபெறும் முதல் மாநில மாநாட்டிற்கு அதிக அளவில் செல்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட அமைப்பாளர் சிவபெருமாள் நன்றி கூறினார்.


Next Story