ராமநாதபுரம் கோட்ட அஞ்சல்துறை ஓய்வூதியர் சங்க கூட்டம்


ராமநாதபுரம் கோட்ட அஞ்சல்துறை ஓய்வூதியர் சங்க கூட்டம்
x
தினத்தந்தி 21 Dec 2022 12:15 AM IST (Updated: 21 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் கோட்ட அஞ்சல்துறை ஓய்வூதியர் சங்க கூட்டம் நடந்தது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் கோட்ட அஞ்சல்துறை ஓய்வூதியர் சங்க கூட்டம் நாகநாராயணன் தலைமையில் நடந்தது. காரைக்குடி செல்வராஜ், உதவி தலைவர் வானமாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் முகமது இஸ்சதீன் வரவேற்றார். கூட்டத்தில் 2020 ஜனவரி முதல் 18 மாதங்களாக முடக்கப்பட்ட 11 சதவீத பஞ்சப்படியை உடனே ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டும். 80 வயதிற்கு மேல் கூடுதலாக வழங்கப்படும் 20 சதவீத பென்சனை 65 வயதுக்கு 5 சதவீதம், 70 வயதுக்கு 10 சதவீதம், 75 வயதுக்கு 15 சதவீதம் என படிப்படியாக உயர்த்தி வழங்க வேண்டும். மருத்துவ உதவியை ரூ.5 ஆயிரமாக உயர்த்த வேண்டும். 8-வது ஊதியக்குழு பரிந்துரையை 2026-ல் நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் பற்குணன் நன்றி கூறினார்.


Next Story