சத்துணவு பணியாளர் சங்க கூட்டம்
சிவகங்கை மாவட்ட சத்துணவு பணியாளர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்றது
சிவகங்கை மாவட்ட சத்துணவு பணியாளர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் நவநீதன் தலைமையில் நடைபெற்றது. போஸ்ராஜ்குமார் வரவேற்றார். கூட்டத்தில் சங்க ஆலோசகர் அயோத்தி, மாநில தலைவர் ஆறுமுகம், துணை தலைவர் உடையார் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி மாவட்ட தலைவராக நவநீதன், செயலாளராக அங்காள ஈஸ்வரி, பொருளாளராக கவிதா, துணை தலைவராக அமுதா, துணை செயலாளராக சுந்தர்ராஜ், மாநில செயற்குழு உறுப்பினராக போஸ் ராஜ்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தொடர்ந்து சத்துணவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சத்துணவு திட்டத்தை தனியாருக்கு விடுவதை கைவிட வேண்டும். காலை உணவு திட்டத்தை சத்துணவு பணியாளர் மூலம் நடைமுறைப்படுத்த வேண்டும். ஓய்வு பெற்ற சத்துணவு பணியாளருக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் மாவட்ட பிரசார செயலாளர் செல்லம்மாள் நன்றி கூறினார்.