ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம்


ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம்
x

வெம்பக்கோட்டையில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டையில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம் மாநில தலைவர் முனியாண்டி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஆறுமுகத்தாய் முன்னிலை வகித்தார். செயலாளர் அந்தோணி வரவேற்றார். கொங்கன்குளம், கோட்டைப்பட்டி, சுப்பிரமணியபுரம், மேலோட்டம்பட்டி, டி.கான்சாபுரம், கீழாண்மறைநாடு உள்பட 14 ஊராட்சிகளுக்கு பொது நிதி வழங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மேலும் மின்சார கட்டணத்தில் உள்ள உபரி தொகையை பொது நிதிக்கு மாற்ற வேண்டும். 15-வது நிதி குழு மானியம் நிர்வாக அனுமதி காலதாமதம் செய்வதை தவிர்க்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஊராட்சி மன்ற தலைவர் சுப்பராஜ் வாசித்தார். முடிவில் பொருளாளர் ராஜ்மோகன் நன்றி கூறினார்.


Next Story