ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம்


ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம்
x
தினத்தந்தி 18 Dec 2022 12:15 AM IST (Updated: 18 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

கடையம் யூனியன் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம் நடந்தது.

தென்காசி

கடையம்:

கடையம் யூனியன் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் 15-வது கூட்டம் கீழாம்பூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் டி.கே.பாண்டியன் தலைமை தாங்கினார். செயலாளர் பூமிநாத், கவுரவ தலைவர்கள் அழகுதுரை, ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் முகமது உசேன் வரவேற்றார். காங்கிரஸ் மூத்த நிர்வாகி செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில், தென்காசி மாவட்டத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்து நலத்திட்ட உதவிகள் வழங்கியதற்கும், அனைவருக்கும் வீடு திட்டத்தை அறிவித்ததற்கும், ஊராட்சி செலவு நிதியை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தியதற்கும் நன்றி தெரிவிப்பது, பிப்ரவரி மாதம் டெல்லியில் நடைபெற உள்ள நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தில் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களும் கலந்து கொள்வது, 23 ஊராட்சிகளும் சுகாதாரமாக மாறியதற்கு அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் உத்தம காந்தி விருது பெறுவது, ஊராட்சி ஒன்றிய சுயஉதவிக்குழுக்கள் ஊராட்சி மன்ற தலைவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஹஜ் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய சமூக ஆர்வலர் நாகூர் மீரான் கவுரவிக்கப்பட்டார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் பொட்டல்புதூர் கணேசன், மேலாம்பூர் குயிலி லட்சுமணன், தெற்கு கடையம் முத்துலட்சுமி ராமதுரை, தெற்கு மடத்தூர் பிரேம ராதா ஜெயம், மடத்தூர் முத்தமிழ் செல்வி ரஞ்சித், திருமலையப்பபுரம் மாரியப்பன், பாப்பான்குளம் முருகன், துப்பாக்குடி செண்பகவல்லி ஜெகநாதன், மாவட்ட கவுன்சிலர் சுதா சின்னதம்பி, கீழாம்பூர் துணைத்தலைவர் முத்தையா, ஊராட்சி செயலாளர் குமரேசன், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story