ஆத்திக்காடு உள்ளிட்ட 4 இடங்களில் புதிய பயணியர் நிழற்குடை


ஆத்திக்காடு உள்ளிட்ட 4 இடங்களில்  புதிய பயணியர் நிழற்குடை
x
தினத்தந்தி 5 Dec 2022 12:15 AM IST (Updated: 5 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆத்திக்காடு உள்ளிட்ட 4 இடங்களில் புதிய பயணியர் நிழற்குடையை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

தூத்துக்குடி

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் ஒன்றியம் முதலூர் ஊராட்சி ஆத்திக்காடு, அன்பின்நகரம், சாஸ்தாவிநல்லூர் ஊராட்சி வாலத்தூர், சௌக்கியபுரம் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் தலா ரூ.5லட்சம் மதிப்பில் புதிய பயனியர் நிழற்குடை கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்ற து. விழாவுக்கு ஊராட்சித் தலைவர்கள் முதலூர் பொன்முருகேசன், சாஸ்தாவிநல்லூர் திருக்கல்யாணி ஆகியோர் தலைமை தாங்கினர். தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் லூர்துமணி, தெற்கு மாவட்ட துணைத் தலைவர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாசானமுத்து வரவேற்றார். இதில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய பயணியர் நிழற்குடைகளை திறந்து வைத்து பேசினார்.

இதில் மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ், யூனியன் கவுன்சிலர் பிச்சிவிளை சுதாகர், வட்டார காங்கிரஸ் பொருளாளர் ஞானசிங், வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story